1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:26 IST)

விளக்கு ஏற்றுவதற்கு உகந்த திசைகளும் பலன்களும் !!

lamp
வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம். விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது. காலையில் 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் விளக்கேற்ற வேண்டும்.


சூரியன் உதிப்பதற்கு முன் நம் வீட்டில் விளக்கேற்றுவது என்பது, மிக மிக நன்மையை அளிக்கும். இந்த விளக்கு ஏற்றும்போது குளித்து விட்டு விளக்கேற்ற வேண்டும். அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு விளக்கேற்ற வேண்டும். அதாவது 06.00 மணிக்கு விளக்கேற்ற வேண்டும். நாம் ஏற்றும் விளக்கு கிழக்கு நோக்கியும், விளக்கினை ஏற்றுபவர்கள் மேற்கு திசை பார்த்த படி இருக்க வேண்டும்.

இறந்தவர்களின் படத்திற்கு விளக்கினை ஏற்றும் போது மட்டும் தான் வடக்கு திசையில் ஏற்ற வேண்டும். மற்ற சமயங்களில் விளக்கின் திசையை மாற்றக் கூடாது. நம் வீடுகளில் குத்து விளக்கு ஏற்றும்போது தரையில் அமர்ந்த நிலையில் தான் குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும்.

விளக்கு ஏற்றும் திசை பலன்கள்:

கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் துன்பங்கள் நீங்கி, குடும்பம் அபிவிருத்தியாகும்.

மேற்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றுவதினால் கடன் தொல்லை நீங்கும், தோஷங்கள் போகும்.

வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது.