1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Nutrients in small grains and its benefits !!

சிறுதானியங்களில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

சிறு தானியங்கள்
சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் சிறுதானியங்களை  ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.

திணை: திணையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும். கண்ணுக்கு ஒளியை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. திணைமாவுடன் தேனை  கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும். விரைவில் செரிமானமாகும்.
 
சாமை: நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இரத்த சோகை  உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது.
 
குதிரைவாலி: குதிரைவாலி சுவைமிகுந்தது. இவை அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். காய்ச்சல் நேரத்தில் கஞ்சி வைத்து குடித்தால் காய்ச்சலை  குணப்படுத்தும். மேலும் வாய்வு பிரச்சனைகளை குணப்படுத்தும்.
 
வரகு: அடிப்படை உணவாக வரகரிசி திகழ்கிறது. மேலும் உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். பித்த உடம்புக்காரர்கள், சளித்தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சனை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்.
 
கேழ்வரகு: கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.
 
கம்பு: கம்புவில் புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அஜீரணத்திற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் சோம்பு...!!