1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Nutrients in Pulicha Keerai and its main benefits !!

புளிச்ச கீரையில் உள்ள சத்துக்களும் அதன் முக்கிய பயன்களும் !!

புளிச்ச கீரை
புளிச்ச கீரையானது ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். புளிச்ச கீரையானது உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மை  கொண்டது.

புளிச்ச கீரையில் தாது உப்புக்கள், இரும்புச் சத்து, விட்டமின்கள் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் என உடல் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு  தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளன.
 
வாதநோய் உள்ளவர்கள் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை புளிச்சக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் தணிந்துவிடும். மஞ்சள் காமாலைக்கு  ஆளானவர்கள் கைப்பிடி அளவு புளிச்சகீரையை அரைத்து சாறு எடுத்து மோருடன் கலந்து பருகிவர மஞ்சள் காமாலை குணமடையும்.
 
சொறி, சிரங்கு உள்ளவர்கள் அதற்கான மேல்பூச்சு மருந்து போட்டு வரும் நேரங்களில் இந்த புளிச்சக்கீரையை சமைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவது குணம் பெறுதலை விரைவுபடுத்தும்.
 
புளிச்ச கீரையின் கனிகளின் சாறுடன் சர்க்கரை மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குணமாகும். புளிச்ச கீரையில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள்  நிறைந்திருப்பதால், சருமப் பாதுகாப்புக்கு நல்லது.
 
பித்தம் உடலில் அதிகமாகி, நாவில் சுவையின்மை பிரச்னை இருப்பவர்கள், புளிச்சகீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, பிரச்சனை நீங்கும். காசநோயை  குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அடிக்கடி சாத்துக்குடி பழச்சாறு குடிப்பதால் என்ன பயன்கள்...?