திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பொன்னாங்கன்னி கீரையில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!

பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகை உண்டு. பொன்னாங்கன்னிக்கு கொடுப்பை, சீதை என வேறு பெயர்களும் உள்ளது. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் மருத்துவக்குணம் குறைவு. 

நாட்டுப் பொன்னாங்கண்ணி தான் உணவுக்கும், மருத்துவத்திற்க்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தான் பலவித சத்துகள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் சத்துகள் அடங்கியுள்ளது. இந்த கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடியது.
 
பொன்னாங்கன்னி கீரையானது மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்துகிறது. பொன்னாங்கன்னி கீரையுடன் மிளகு மற்றும்  உப்பு சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 
பொன்னாங்கன்னி கீரையை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடலும், தோலும் பளபளப்பாகும். பொன்னாங்கன்னி கீரையை மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கும் புத்துணர்ச்சி உண்டாகும்.
 
அதிக வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
 
பொன்னாங்கன்னி கீரையானது வாய் துர்நாற்றத்தை போக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு உண்டாகும். பொன்னாங்கன்னி கீரையை துவரம் பருப்பு மற்றும் நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
 
பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், பார்வை மங்குதல், கண்ணில் கட்டி, கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.
 
பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள், மற்றும் பற்கள் உறுதியாகின்றன. பொன்னாங்கன்னி கீரையை சாப்பிடுவதால் ஆண்களின் விந்து உற்பத்தி அதிகமாகும்.