வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மை கொண்ட நூக்கல் !!

Written By Sasikala
Updated: சனி, 29 ஜனவரி 2022 (13:15 IST)
நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது. நூக்கலானது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.


நூக்கல் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.

நூக்கலில் காலோரிகள் குறைவு, மேலும் உடல் எடை அதிகரிக்காது. நூக்கலில் வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் போன்றவை உள்ளன.

நூக்கலில் உள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு நல்லது.

நூக்கலானது வயிற்று பிரச்சனைகளை நீக்கும் தன்மைக் கொண்டது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். நூக்கல் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் குடல் நாளங்கள் உறுதிப்படும், மேலும் எலும்புகளும் உறுதியாகும்.

நூக்கலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது. நூக்கலானது மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூக்கலின் கீரையில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

நூக்கல் ஜீரண சக்தியை அதிகரிக்கும். நூக்கலானது நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. மேலும் வயிற்று பிரச்சனைகளுக்கும், வற்றுப்புண்களுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்த்து போராட கூடியது.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments