வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும் இயற்கை வழிகள்...!!

உணவுக்குப் பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று, சாறை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வந்தால், உண்ட உணவு எளிதில் சீரணமாகும். வாய் நாற்றமும் போகும்.
உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால்,  துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
 
காரட், ஆப்பிள் போன்றவற்றை நன்கு கடித்து சாப்பிடலாம். நொறுக்குத் தீனியாக வேர்கடலை, குறைந்த கொழுப்பு சத்து கொண்ட சீஸ்  முதலியவற்றை சாப்பிடலாம். இவை பற்களின் மஞ்சள் கறை படிவதைத் தடுப்பதுடன், வாய் துர் நாற்றத்தைத் தடுக்கவும் உதவும். இவற்றை  கடித்து சாப்பிடுவதால் பற்களும் பலமாக ஆகின்றன.
 
கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும். கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
 
உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு  துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
 
பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய  மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல்  தடுக்கலாம்.