குழந்தைகள் செல்ஃபோன் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பது தெரியுமா??

Last Updated: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (13:42 IST)
குழந்தைகள் செல்ஃபோனில் வீடியோ பார்ப்பதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் வரும் என பார்க்கலாம்.

தற்போது குழந்தைகள் அதிகமாகவே செல்ஃபோன்களுக்கு அடிமையாகி வருகின்றனர். பெற்றோர்கள், குழந்தைகள் நம்மை தொந்தரவு செய்ய கூடாது என குழந்தைகளின் கையில் செல்ஃபோனை கொடுத்து எதாவது கார்ட்டுன் வீடியோவை பார்க்க வைக்கின்றனர். மேலும் குழந்தைக்கு சோறூட்டுவதற்கு கூட தற்போது செல்ஃபோன் தேவைப்படுகிறது.

இந்நிலையில் குழந்தைகள் அதிக நேரம் செல்ஃபோனில் வீடியோ பார்ப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன என பல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகள் வீடியோ பார்ப்பதால் கற்றல் திறன் குறைகிறது. நீண்ட நேரம் மொபைலையே பார்த்துகொண்டிருப்பதால் குழந்தைகள் பெற்றோர்களிடம் நேரம் செலவிடுவதில்லை. இதனால் பெரும் தனிமைக்கு உள்ளாகிறார்கள். மேலும் வெகு நேரம் குனிந்து கொண்டே வீடியோ பார்ப்பதால் விரைவில் கழுத்துவலி ஏற்படும்.

அதிகமாக செல்ஃபோனில் வீடியோ பார்க்கும் குழந்தைகள், வளரும்போது காலப்போக்கில் தண்டுவடம் பாதிக்கப்படும். இதனை ஆரம்பத்திலேயே தடுக்காமல் போனால், குழந்தைகளின் எதிர்காலம் பெரிதும் பாதிப்புள்ளாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :