வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

செரிமானம் ஆகாமல் வயிற்றில் கேஸ் சேருவதை தடுக்கும் எளிய வழிகள்...!

சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாதபோது அதிலிருக்கும் பேக்டீரியாக்காளால் வயிற்றில் கேஸ் சேரும். அதே போல அதிக அளவிலான ஃபைபர் உணவுகள், ஜீரணிக்க தாமதமாகும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதுவும் வயிற்றில் கேஸ் சேரும்.
உணவு வகைகளை குரைத்துவிட்டு நீராகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், சூப், கஞ்சி, ஜூஸ் போன்று எளிதில் ஜீரணம் ஆக  கூடியவற்றை குடியுங்கள்.
 
பெருஞ்சீரகம் இதற்கு உடனடி தீர்வு வழங்கும். தண்ணீரை சூடாக்கும் போது அதில் ஒரு ஒரு சிட்டிகை பெருஞ்சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள் இதை அப்படியே குடிக்கலாம் அல்லது இதனோடு சிறிது புதினா இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து  குடிக்கலாம்.நல்ல பலன் கிடைக்கும்.
 
வயிற்றில் கேஸ் சேர்ந்து வயிறு உப்பலாக இருந்தால் முதலில் தரையில் படுத்துக் கொள்ளுங்கள். தலையை உயர்த்தி உங்களின் உடல் கீழ் நோக்கி இருக்குமாறு தரையில் படுங்கள். கட்டில், சோஃபா போன்றவற்றில் படுப்பதை தவிர்த்திடுங்கள்.
 
பூண்டு: உணவு ஜூரணத்திற்கும், கேஸ் பிரச்சனைக்கும் பூண்டு பெரும் பங்காற்றும். இரண்டு மூன்று பூண்டுகளை நெருப்பில் சுட்டு அப்படியே  சாப்பிடலாம். அல்லது தண்ணீரில் பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடியுங்கள்.
 
பெருங்காயம்: நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து குடிக்கலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்றுமுறை இப்படி குடிக்கலாம். அதற்கு  மேல் வேண்டாம். அதிகமாக குடித்தால் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி விடும்.
 
சூடான பானங்களை குடியுங்கள். டீ, காபி, க்ரீன் டீ போன்றவை குடிக்கலாம். இஞ்சி சாறு, இஞ்சி தேநீர் போன்றவற்றையும் குடிக்கலாம்.
 
இலவங்கப் பட்டை: இலவங்கப் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம் அல்லது இலவங்கப்பட்டையை வறுத்துப் பொடி செய்து கொள்ளுங்கள் அதனை பாலில் கலந்து கூட குடிக்கலாம். இது உடனடி நிவாரணத்திற்கு கை கொடுக்கும்.