செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் கடுகு எண்ணெய்...!!

கடுகு எண்ணெய்யில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும்போது அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும்  இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.
கடுகு எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 30 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
 
கடுகு எண்ணெய்யில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊறவைத்தால், தலையில்  உள்ள பொடுகானது நீங்கிவிடும்.
 
கூந்தல் நன்கு பட்டுப் போன்று, இருப்பதற்கு, கடுகு எண்ணெய்யை தயிருடன் கலந்து, தலையில் தடவி ஊறவைத்து குளிக்கவேண்டும்.  இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
கடுகு எண்ணெய்யைத் தேய்த்துக் குளித்துவந்தால் உடல்வலி நீங்கும். குறிப்பாக தசைகளில் ஏற்படும் வலிகள் குணமாகும். உடலில் எந்தப்  பகுதியிலாவது அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டு இருந்தால், கடுகு, மஞ்சள் இரண்டையும் சேர்த்து எண்ணெய்யில் காய்ச்சி வீக்கம் ஏற்பட்ட  இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 
விஷம், பூச்சிமருந்து அருந்தியவர்களுக்கு இரண்டு கிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும். இதனால்  விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.
 
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெய்யும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.