1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Beauty Tips for Quick Remedies for Skin Problems ...!

சரும பிரச்சனைகளுக்கு விரைவில் நிவாரணம் தரும் அழகு குறிப்புகள்...!

அழகு குறிப்புகள்
கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான வெந்நீரில் கழுவ  முகம் மிருதுவாகும்.
எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு, வெள்ளரிக் காய் சாறு இதில் ஒன்றை சிறிது தேனுடன் கலந்து உடலில் பூசிக்கொள்ளலாம்.
 
பப்பாளிப் பழத்தை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவி வர முகம் நன்கு பொலிவு பெறும்.
 
ஆலிவ் என்ணெய்யுடன், சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவவேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை  மறைந்து மிருதுவாக மாறும்.
முகம் கருத்திருக்கும் இடத்தில் எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு, தயிர் மூன்றையும் கலந்து பூசி 15 நிமிடம் கழித்து கழுவி வர சருமம்  பொலிவடையும்.
 
வெளியில் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை சிறிது சருமத்தில் தேய்த்து சென்றால் சருமம் பாதிப்படையாது.
 
அன்னாசிப் பழத்துடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முகம் நல்ல பொலிவு பெறும்.
 
கோடைக்காலங்களில் சோப்பை அதிகம் பயன்படுத்தாமல் அடிக்கடி வெறும் தண்ணீரில் முகத்தை கழுவவேண்டும்.
 
பச்சை உருளைக் கிழங்கின் சாரற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
அடுத்த கட்டுரையில்
இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!