1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

குடல்புண்களை விரைவில் குணமாக்கும் முளைக்கீரை...!!

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே இந்த கீரையை வளரும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.

முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில்  கிடைக்கும். 
 
குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நன்கு உயரமாக வளருவார்கள். முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து  சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. 
 
முளைக்கீரையை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து  சமைத்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
 
முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப் பரு, தேமல் போன் றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும். சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். 
 
இந்த கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும். சீரகத்தை நெய்யில் வறுத்து அதனுடன் முளைக்கீரை, மிளகாய்வற்றல், தண்ணீர் சேர்த்து அவித்து அந்த சாற்றை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் எல்லா விதமான காய்ச்சல்களும்  குணமாகும்.
 
முளைக்கீரை உடன் மிளகு சீரகம் பூண்டு சின்ன வெங்காயம் மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மையை போக்கி நல்ல பசி உண்டாகும். வயதானவர்கள் இந்த கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான சக்தியை அளிக்கும்.