புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முகத்தில் பருக்கள் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!

பரு முகத்தில் வருவதால், பருவக்கான கிரீமோ, பேக்கோ போட்டால் பரு போய்விடும் என்று பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

உண்மையில் தலையில் பொடுகுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு முகத்தில் பரு வருகிறது. ஸ்கால்பில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு இறங்கி வருவதால் அவை படும் இடங்களில் எல்லாம் பரு வருகின்றது. அதனால் பலருக்கு நெற்றியிலும் கன்னங்களிலும் பரு வருகிறது. 
 
எண்ணெய் பசை அதிகமுள்ள சருமம் என்றாலும், அதாவது நம் சருமத்தின் செபேஸியஸ் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகம் இருந்தாலும் பரு வரலாம்.
 
பொடுகுப் பிரச்னையால் பரு வந்திருக்கிறதா என்று பார்த்து முதலில் தலையில் பொடுகை சரிப்படுத்திக் கொண்டால்தான் முகத்தின் பருக்கள் குறையும்.
 
பொடுகு இருப்பதாகத் தெரிந்தால் தலை வைத்துப் படுக்கும் தலையணை மூலம் கூட பரு வரலாம். அல்லது வீட்டில் மற்றவருக்கும் வரலாம். எனவே  படுக்கும்போது தலையணை மேல் ஒரு டவல் போட்டு தினம் அதை எடுத்து வாஷ் பண்ணி விட்டாலே பருவை வரவிடாமல் தடுக்கலாம்.
 
பரு இருந்தால் முகத்துக்கு சோப் போடக்கூடாது. சோப்பில் உள்ள கொழுப்பு மறுபடி சருமத் துளைகளை அடைத்துக் கொண்டு விடும். பரு சீக்கிரம் போகாது. இதற்கென்றே சில ஃபேஸ் வாஷ் கிடைக்கிறது. அக்னே ஃபேஸ்வாஷ் என்று கேட்டு வாங்கி, சோப்புக்கு பதில் முகத்துக்குப் போடலாம்.
 
முகத்தில் பரு வருபவர்கள் அனைவருக்குமே அவை கருப்புத் தழும்பாக மாறிவிடுவதில்லை. பருவின் மேல் கை வைத்து அந்தப் பருவின் உள்ளிருக்கும் சீழை  எடுக்கிறேன் என்று கிள்ளி கிள்ளி எடுத்தாலோ, அல்லது ஃபேஸ் பேக் போட்டு அழுத்தமாக தேய்த்தாலோதான் அந்த இடம் பாதிக்கப்பட்டு பரு, தழும்பாக மாறி  மாதக் கணக்கில் நிறம் மாறாமல் அப்படியே நின்று விடுகிறது. முகத்தில் கை வைக்காமல் பருவுக்கான ட்ரீட்மெண்டை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டால்,  பருக்கள் போய்விடும் தழும்புகளும் வராது.