1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (14:16 IST)

இலவங்கப்பட்டையில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும் !!

ஆரோக்கியம் மட்டுமின்றி அழகை பராமரிக்கவும் இலவங்கப்பட்டை பயன்படுத்தப்படுகின்றது. உச்சந்தலையில் உபயோகித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். நல்ல சருமத்தைப் பெறவும் சரும நிறத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றது.


பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வாக பயன்படுத்தப்படுகின்றது. ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சினையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. எனவே இதனைத் தடுக்க இலவங்கப்பட்டை தினமும் உட்கொண்டு வந்தால் நன்மை கிடைக்கும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியைப் போக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. தலைச்சுற்றலை தடுக்கும். இலவங்கத்தினுடைய மனம் மற்றும் தசையை இறுக்கும் குணத்தால் கபத்தை வெளியேற்றும். மற்றும் வாந்தியை தடுக்கும்.

இருமல் ஏற்படும் போது தற்காலிக மருந்தாக இலவங்கம் பயன்படுத்தப்படுகின்றது. நீரிழிவு உள்ளவர்கள் இலவங்கப்பட்டையை அப்படியே உட்கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை வெப்பம் தரும் நறுமணப் பொருளாக உள்ளதால் பட்டையை சளி மற்றும் ப்ளு காய்ச்சலின் போது மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.

நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுகின்றது. ஜீரண சக்தியை சீராக்கும். உடல் எடை மற்றும் சக்தி இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. பசியை தூண்டக்கூடியது.

பல் வலியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. பல் வலி மற்றும் பல் ஈறுகளில் உள்ள வீக்கங்களைக் குறைக்கக்கூடியது. இரத்தப் புற்றுநோய், குடற்புற்றுநோய், தசைப்புற்று போன்ற நோய்களை இலவங்கப்பட்டை மருத்துவம் மூலம் குறைக்கலாம்.