மருத்துவ தன்மை அதிகம் உள்ள வெட்டிவேர் எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...!

வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது.
நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என  வழங்கப்படுகிறது.
 
வெட்டிவேர் மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது. இதிலிருந்து எடுக்கப்படும்.தைலமும் நறுமணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும். குளியல்  சோப்புகளிலும், பயன்படுத்துவதுண்டு. 
 
வெட்டிவேர் அதிக வாசம் உடையதாகவும், மருத்துவ தன்மை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. வெட்டிவேர் எண்ணெய்யை கை, கால்  பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும். காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும்.
 
வெட்டிவேர் ஊறிய நீரை குடித்தால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை  குறையும்.
 
கோடை காலத்தில் மண்பானை நீரில் வெட்டிவேரை இட்டு குடிப்பது வழக்கம். இது தாகத்தை தணித்து, சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும்  தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.
 
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. 
 
செய்முறை: சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.


இதில் மேலும் படிக்கவும் :