சுண்டைக்காயின் அளவு வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம், ஆனால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளாம். இவை மனிதனுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதன் மருத்துவ குணங்கள் குறித்து கீழே பார்ப்போம்.
செரிமான சக்தியை தூண்டவும், தாய்ப்பால் சுரப்பையை அதிகரிக்கவும் சுண்டைக்காய் நல்ல மருந்தாக உதவுகிறது.
சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் சுண்டக்காயை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
சுணடைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளதால் உடல் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும்.
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம். இது மார்புச்சளி மற்றும் குடலில் உள்ள கசடுகளை நீக்கும்.