செவ்வாய், 6 ஜூன் 2023
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கலாமா...?

வீட்டில் சமையலறை வாஸ்து மூலைகள் ஆன அக்கினி பகவான் மூலையில் அதாவது தென்-கிழக்கு திசைகளில் தான் அமைக்க வேண்டும். சமையலறை அமைப்பதற்கு இதுவே மிகவும் பொருத்தமான பகுதியாகும். இந்த வாஸ்து சாஸ்திரம் படி சமையலறையை அமைப்பதினால் வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும்.

சமையல் செய்யும் பொழுது, வீட்டுப் பெண்மணி அல்லது சமையல்காரர் கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதே போல 'அடுப்பு' அது கேஸ் அடுப்பாக  இருந்தாலும் சரி, விறகு அடுப்பு அல்லது நிலக்கரி அடுப்பு அல்லது மின் அடுப்பாக இருந்தாலும், அது அமைக்கப்பட்டிருக்கும் திசை முக்கியமானது என  நம்பப்படுகிறது.
 
எக்காரணம் கொண்டு வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் வீட்டில் இருக்கும் செல்வங்களை எரிப்பதற்கு சமம்.
 
ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.
 
வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.
 
கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும்.