1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (09:50 IST)

வெதுவெதுப்பான நீரில் பாதங்களை வைப்பதால் கிடைக்கும் ஏராள நன்மைகள் !!

உடலின் மென்மையான பாகங்களில் பாதமும் ஒன்று. வெது வெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊறவைத்து, பின் ஸ்கர்ப் கொண்டு பாதங்களை லேசாக தேய்க்க வேண்டும். 

பிறகு மென்மையான டவலால் கால்களைத் துடைக்கவும். இறுதியாக கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய் கொண்டு தடவ வேண்டும்.
 
பாதங்களுக்கு மசாஜ் செய்யும் போது உடலின் முக்கிய நரம்புகள் தூண்டப்படுகிறது. இதனால் மனதிற்கு ரிலாக்ஸ் கிடைக்கிறது. 
 
பாதங்களில் நிறைய வர்மப்புள்ளிகள் இருப்பதால் கால் பராமரிப்பில் முதல் விஷயமாக கால்களை கழுவ சொல்கிறார்கள். காலை கழுவுவதால் நோய்க்கிருமிகள் அண்டுவதை தடுக்க முடியும்.
 
கால் அலம்புவதால் ‘உடல் அசதி போகும், கண்பார்வை மேம்படும். ஆண்மைக்குறைவு ஏற்படாது மற்றும் மனச்சோர்வைப் போக்கி சந்தோஷம் கொடுக்கும்’ போன்ற நாம் அறியாத பல விஷயங்களையும் ஆயுர்வேதம் கூறுகிறது. நம்முடைய பாதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.