1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (11:26 IST)

எளிதாக கிடைக்கும் சப்பாத்திக்கள்ளியில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

சப்பாத்திக்கள்ளி வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தே உள்ளடக்கி நம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.


சப்பாத்திக்கள்ளியில் அதிகமான நார்ச்சத்து உள்ளது. மேலும் புத்துணர்வு தரும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளது.

சப்பாத்தி கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரிசெய்து விடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும்  மாரடைப்பை தவிர்க்க முடியும்.

சப்பாத்திக்கள்ளியை உணவாக பயன்படுத்துவதால், கொழுப்புச்சத்து குறைந்து உடல் உறுப்புகள் பலம் பெற்று, சீராக இயங்க வழி ஏற்படுகிறது.

சப்பாத்திக்கள்ளியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் சிறுநீர் மற்றும் சிறுநீர்த்தாரை நோய்கள் பலவும் கட்டுப்படும்.

இன்றைய சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை  பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன.

இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக்  காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.