வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:39 IST)

வாழை இலை குளியலால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம் !!

Banana Leaf Bath
வாழை இலை குளியல் உடலுக்கு புத்துணர்ச்சியையும், புதுப்பொலிவையும் தரும். உடலில் உள்ளுறுப்புகளுக்கும், வெளிஉறுப்புகளுக்கும் மகத்துவம் தரும் ஒரு இயற்கை மருத்துவம் ஆகும்.


வாழை இலை குளியல் செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உடல் முழுவதும் நீளமான 2 வாழை இலைகளை கீழே நீளவாக்கில் போட்டு அதன்மேலே வாழை இலை குளியல் செய்ய உள்ள நபரை படுக்க வைக்கவேண்டும்.

பின்னர் அவர் உடல் மேல் மேலும் மூன்று நீளமான வாழை இலைகளை வைத்து உடல் முழுவதும் மூன்று முதல் நான்கு இடங்களில் இறுக்கம் இல்லாமல் கட்டிவிட வேண்டும். மூக்கு மற்றும் கண் பகுதியில் சிறிது துவாரம் விட வேண்டும். இதுபோல உள்ள நிலையில் இளம் வெயில் நேரத்தில் 45 நிமிடம் இருக்க வேண்டும்.

அவ்வப்போது வாழை இலை குளியலில் ஈடுபட்டவரிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக அவிழ்த்துவிட வேண்டும். தொந்தரவு இல்லை என்றால் குறித்த நேரம் வரை வைத்திருக்கலாம். சரியாக வைத்து அவிழ்த்து பார்க்கும்போது உடலில் இருக்கும் கெட்ட நீர்களை அதிக அளவில் வெளியேற்றிவிடும். இதுபோல தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த வாழை இலை குளியலை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம். மேலும் இந்த வாழை இலை குளியலோடு புற்றுமண் குளியல், மூலிகை தைல குளியல், மூலிகை வெந்நீர் குளியல், மூலிகை பற்று போன்ற பலவகையான சிகிச்சையை சேர்த்தும் செய்யலாம்.

வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைவியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய்களை விரட்டி அடிக்கலாம்.