1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:56 IST)

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ள பீன்ஸ் !!

பீன்ஸ் காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள அது இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.


தினமும் பீன்ஸ் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட்டால் நன்கு செரிமானமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.

நார்சத்து அதிகமுள்ள பீன்ஸ் அடிக்கடி எடுத்துக் கொண்டால் செரிமான உறுப்புகளை பாதுகாக்கும்.

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் கால்சியம் சத்து சிறிதளவு பீன்ஸில் இருப்பதால் இது எலும்புகளை பாதுகாக்கும்.

பீன்ஸ் சாப்பிடுவதால் இதயத்திற்கு செல்லும் நரம்புகளை வலுப்படுத்தி ரத்தம் சீராக செல்வதற்கு வழிவகுக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

பீன்ஸ் ரத்த ஓட்டத்தை சீராக்கி உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி புரிகிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபட்ட நீக்கி ரத்தசோகையை குணப்படுத்துகிறது.