பாகல் இலை சாற்றின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்து பொடித்து சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இருண்டு வேளையும் உட்கொண்டால் விஷ ஜீரம் நின்று விடும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும், பூச்சிக்கடி விஷம் உடம்பில் ஏறாது.
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுதம்மாகி, சிரங்கு உதிந்து விடும்.
ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து, சுத்தமான அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர கண்களுக்கு நன்மை அளிக்கும்.
பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால், அத்துடன் விஷப்பூச்சிக் கடி விஷம் நீங்கும்.
பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணையைக் கலந்து உட்கொண்டால் காலரா நோய் கட்டுப்படும்.
நீரிழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்து அளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிடு வர வேண்டும்.
ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சம அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வருவது காசநோயை கட்டுப்படுத்தும்.
சிறுநீரகக் கற்களுக்கும், ஜீரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் பாகல் மருந்தாகிறது. பாகல் இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கும் பயன்படுத்துகிறார்கள்.