திங்கள், 13 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

கட்டி பெருங்காயம், வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டலில் போட்டு வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.
வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம்  உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ  அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது.
 
தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய றிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். 
 
வயிறு உப்புசமாகவோ ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த வெந்தய பொடியை 1 கரண்டி, கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும். முட்டு வலி இருப்பவர்கள் வெந்தய பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி  தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும். 
 
இரத்ததிலுள்ள சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறைய, முழு வெந்தயம் 2 டீஸ்பூன், பாசிபயறு - 2 கரண்டி, கோதுமை - 2  கரண்டி, இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு - 2,  சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து  காலை உணவாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறையும்.
 
வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி, மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, பெருங்காயதூள், உப்பு இவை எல்லாம் கொஞ்சம்  கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.
 
இட்லி அரிசி, 1/2 குவளை வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் அரைத்து தோசை ஊற்றி சாப்பிட  பொன்னிறத்தில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை தரும். 
 
தினமும் காலையில் வெறும் வயிற்றில், முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும்.  தலையில் முடி கொட்டாது.
 
முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள் காலை அரைத்து, தலையில் வைத்து ஊறி குளித்தால் தலை முடி பள  பளப்பாகும். ரொம்ப குளுமையானது.