1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:53 IST)

திராட்சை சாறை தினமும் அருந்துவதால் இத்தனை நன்மைகளா...!!

கருப்பு திராட்சை சிறிய பழம் போல் இருந்தாலும் எண்ணற்ற ஆரோக்கிய தன்மையை தனக்குள் கொண்டு உள்ளது. இவற்றில் ரெஸ்வரடிரால் என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது. கரோனரி ஹார்ட் டிசிஸ் எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும்.


புற்றுநோய்க்கு என்று  சிகிச்சை முறையில் கதிர்வீச்சு செய்வதன்மூலம் நல்ல ஆற்றலான செல்களை இழந்து விடுவோம் அதே சமயத்தில்  கருப்பு திராட்சையை உட்கொள்ளும்போது அந்த செல்களை மறுபடியும் ஊக்குவிக்க செய்கின்றது.

வெள்ளை கருப்பு சிவப்பு என்னும் பல நிறங்களிலும் கிடைக்கிறது. 14 மேற்பட்ட வகைகள் உள்ளன. 100 கிராம் திராட்சைப் பழம் 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது.இதில் கெட்ட கொழுப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடலில் ஏற்படும் உஷ்ணத்தைத் தணிக்கவும் இரத்த விருத்தி ஏற்படவும் மற்றும் ரத்த சுத்தி நடைபெறவும் பச்சை திராட்சை சிறந்ததாகும். குடல் புண்ணை குணப்படுத்தும் திராட்சை பழச்சாறு நல்ல மருந்தாக பயன்படுகிறது .

காலையிலும் மாலையிலும் கொடுத்து வந்தால் குணம் கிடைக்கும். இரத்த அழுத்த நோயால் துன்பப்படுபவர்கள் திராட்சை சாறை தினமும் அருந்தி வரவேண்டும். பன்னீர் திராட்சையை கொஞ்சம் எடுத்து அரை டம்ளர் நீரில் ஊறவைத்து பின்னர் நன்கு காய்ச்சி பிழிந்து அதே அளவு பசும் பால் விட்டு தினமும் பருகி வந்தால் இருதயம் நல்ல வலிமை பெறும். இவ்விதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு அருந்திவர வேண்டும் .

ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள் காய்ச்சல் நோய் காமாலை போன்ற நோய்களால் துன்பப்படுபவர்கள் காபூல் திராட்சை என்னும் பச்சைத் திராட்சையை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.