1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சுக்கின் அற்புத மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!!

சுக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால் உடல் வலுவாகவும், இளமையாகவும், நீண்ட ஆயுளுடன் வாழலாம். நீரழிவு நோய் வராது. நரம்புகள் வலிமை பெறும், உடல்  சுறுசுறுப்பாகும். சுக்கு உடலில் உள்ள மக்கு எல்லாவற்றையும் நீக்கும்.

சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சுடான பதத்திற்கு வந்த பிறகு, வலியுள்ள கை, கால் மூட்டுகளில் தடவ மூட்டு வலிகள்  முற்றிலும் நீங்கும்.
 
சுக்குப்பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உண்டு வர பித்தம் தணியும். சுக்குப்பொடி, வேப்பம்பட்டை போட்டு கஷாயமாக்கி, குடித்து வர ஆரம்பநிலை வாதம்  குணமாகும். 
 
சிறிது சுக்குடன் ஓரு வெற்றிலை சேர்த்து மையாக அரைத்து தின்றால் வாயு தொல்லை நீங்கும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவற்றை இடித்து பொடியாக்கி கஷாயமிட்டு பருகி வர கடுஞ்சளி மூன்றே நாளில் குணமாகும்.
 
சுக்குடன் சிறிது நீர் சேர்த்து, விழுதாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். சுக்குடன் தனியா சேர்த்து, சிறிது நீர் தெளித்து, மையாக அரைத்து  உண்டால், அதீக மது அருந்திய போதை தெளியும்.
 
சிறிது சுக்குடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள நஞ்சு விளைவிக்கும் கிருமிகள் அழியும். சுக்குடன் கொத்தமல்லி சேர்த்து, கஷாயம் போல் செய்து பருகி வர மூல நோய் குணமாகும். 
 
சுக்கு, ஐந்து மிளகு, வெற்றிலை ஓன்று சேர்த்து மென்று சாப்பிட தேள் கடி, பூரான் கடி, விஷ கடிகள் நீங்கும். 
 
கரும்பு சாறுடன், சிறிதளவு சுக்கை சேர்த்து தினமும் குடித்து வந்தால் வயிறு சம்மந்தமான எரிச்சல் குணமாகும். சுக்கை பொடியாக்கி கொதிக்க வைத்து தேன்  கலந்து குடித்து வந்தால் மூட்டில் ஏற்படும் வீக்கமும், மூட்டு வலியும் குணமாகும்.