செவ்வாய், 25 ஜூன் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:36 IST)

வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தும் தன்மை கொண்ட வெண்டைக்காய் !!

Lady Finger
வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புச்சத்துகள் உள்ளன.


வெண்டைக்காயின் வழவழப்புத் தன்மையில் அதிக மருத்துவப் பலன்கள் மறைந்துள்ளது. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. மேலும் மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்த கூடியது.

நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

வெண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏற்படும் பசி உணர்வை கட்டுபடுத்தும். வெண்டைகாய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும், மேலும் உடலின் எடையும் சீக்கிரமாக குறையும்.

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.