1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூலம் நோய் உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக விளங்கும் கருணைகிழங்கு !!

கருணைக்கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று காரும் கருணை மற்றொன்று காராக் கருணை. காரும் கருணையினை பிடிகருணை என்றும் அழைப்பர்.
 

வாரத்தில் ஒரு முறை கருணைக்கிழங்கிணை சாப்பிட்டு வருவதன் மூலம் நம் வயிற்றில் உள்ள அமில சுரப்பை சீராகிறது மற்றும் பசியின்மை குணமடைகிறது.
 
கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.
 
கருணை கிழங்கிற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும். பித்த கற்கள் உருவாவதை தடுக்கும்.
 
மூலம் நோய் உள்ளவர்களுக்கு கருணைகிழங்கானது  சிறந்த இயற்கை குணமுடைய  மருத்துவ உணவாக  இருக்கிறது.
 
மலச்சிக்கல் மற்றும் குடலில்  உள்ள புண்கள் உள்ளவர்கள்  தினமும் ஒரு வேளை கருணை கிழங்கினாள்  சமைக்கப்பட்ட  உணவினை  சாப்பிடுவதன்  மூலமாக  குடலில் ஆசனவாயில் உள்ள  புண்களை விரைவில் ஆற்றுகிறது.
 
இந்த கிழங்கில் உள்ள துவர்ப்புச் சுவை இரத்த குழாய்களைச் சுருங்க செய்கிறது. கிழங்குகளில் மிக சுலபமாக ஜீரணமாகவும் தன்மை கொண்டது.