1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் பூந்திக்கொட்டை !!

பூந்திக்கொட்டையை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். பூந்திக் கொட்டையிலுள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு அதன் தோல் பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பூந்திக்கொட்டை பயன்படுத்தும் முறைகள் பூந்திக்கொட்டை விதையை நீக்கிவிட்டு அதன் மேல் பக்கத்தில் உள்ள தோலை எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.
 
பூந்திக்கொட்டை கொதிக்கும்போது நுரை கட்டும். அப்போது அடுப்பினை மெதுவாக குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து அதற்கு பின் அடுப்பினை நிறுத்தவும்.
 
குளிர்ந்த பின்னர் நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய நீரினை குளிர்சாதன பெட்டியில் எடுத்து வைத்து கொண்டு தேவைப்படும் பொழுது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
 
வடிகட்டிய பின் எஞ்சியுள்ள பூந்திக்கொட்டை சக்கையிணை தூக்கி எறிய வேண்டாம். ஏனென்றால் அதனை மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளலாம். 
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட சாரத்தை எடுத்து பாத்திரத்தில் சிறிதளவு ஊற்றி அதனுடன் சிறிதளவு ஊற்றினாலே நுரை வருவதை தாராளமாக பார்க்கலாம். இந்த சாரத்தை துணி துவைக்கும்போது ஊற்றி துவைக்கலாம். மேலும் இதனை ஏர் கண்டிஷனர் ஆகவும் பயன்படுத்தலாம்.
 
பூந்திக்கொட்டை நன்றாக உடைத்து அதில் உள்ள கொட்டைகளை நீக்கி அதனுடைய தோலை மட்டும் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். ஊறவைக்கப்பட்ட தண்ணீருடன் சீயக்காய் சேர்த்து தலைக்கு குளித்து வருவதன் மூலமாக தலைமுடி பளபளப்பாகவும், முடி உதிர்வது இல்லாமலும் இருக்கும்.
 
பேன் பொடுகு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட தினசரி குளியலில் பயன்படுத்தலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து மேலே உள்ள தோலினை உரித்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 
சாதம் வடித்த கஞ்சியை கொண்டு அதனுடன் சீயக்காய் பிடித்து வைக்கப்பட்ட பூந்திக்கொட்டை பொடி சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வரலாம். மேலும் தோல் நோய்கள் முற்றிலும் நம்மை நெருங்காது.