மூட்டுவலியை முடக்க கூடிய முடகத்தான் கீரை

மூட்டுவலியை முடக்க கூடிய முடகத்தான் கீரை


Sasikala|
பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாளனவர்களுக்கு வந்து விடுகிறது. இப்போது எல்லா வயதினருக்கும் மூட்டுகளில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகி விட்டது.

 
 
மூட்டுவலியை முற்றிலுமாக குணப்படுத்த இயற்கையான முறையில் வழிகள் உண்டு. இந்த கீரை எவ்வாறு சாப்பிடுவது. எந்தெந்த முறையில் பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்வோம்.
 
சாப்பிடும் விதம்
 
* முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.
 
* முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
 
* சுத்தம் செய்தபின் தண்ணீரை வடிய செய்து நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
 
* மூட்டுவலி நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.
 
* தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.
 


இதில் மேலும் படிக்கவும் :