1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (14:43 IST)

தினமும் குழந்தைகளுக்கு சிறிதளவு தேன் கொடுப்பது நல்லதா...?

Honey Face Pack
பல வகையான ஒவ்வாமைகளை சரிசெய்ய சிறிதளவு தேனை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு எந்த வகையான ஒவ்வாமை பிரச்சனைகள் இருந்தாலும் அது நீங்கும்.


தேன் உடலுக்கு தேவையான பல விதமான தாதுக்கள் இன்ன பிற சத்துக்களை அதிகம் கொண்டது இதை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். சுறுசுறுப்பு தன்மை கூடும். உடல் அழகான தோற்றம் பெறும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும் தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

தினமும் இரவு தூங்க செல்லும் முன்பு இளம் சூடான பசும்பாலில் சிறிது தேனை கலந்து பருகி வந்தால் தூக்கமின்மை பிரச்சனை நீங்கும். அடிக்கடி விழிப்பு ஏற்படாத ஆழமான தூக்கம் ஏற்படும்.

பற்களில் சொத்தை ஏற்படுதல், பற்களின் வேர்கள் வலுவிழந்து பற்கள் ஆடுவது, ஈறுகளின் வீக்கம் மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் போக்கும் திறன் தேனுக்கு உண்டு. வாய் மற்றும் நாக்கில் ஏற்படும் புண்களையும் தேன் ஆற்றுகிறது.

கிரீன் டீயில் சிறிதளவு தேன் கலந்து தினமும் பருகி வருபவர்களுக்கு பொடுகு தொல்லை கூடிய விரைவில் நீங்கும். தலைமுடியின் பளபளப்பு தன்மையும் அதிகரிக்கும்.

தேனை அனைவரும் தினந்தோரும் சிறிதளவு சாப்பிட்டு வருவதால் மூளை புத்துணர்ச்சி பெறும். ஞாபகத்திறனும் அதிகரிக்கும். தினமும் குழந்தைகளுக்கு தேன் சிறிதளவு கொடுத்து வருவது அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும்.