புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதா வெள்ளரிக்காய்?

Sasikala|
வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன.


விட்டமின் சி நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை தடுக்கிறது. புற்று நோய் வராமல் தடுக்கும்.
 
வெள்ளரிக்காய், பாதியளவு எலுமிச்சை, புதினா இலை ஒரு கையளவு, உப்பு சிறிதளவு, எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணிநேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.
 
வெள்ளரிக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்தவும், தீராத மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது. சருமத்திற்கு தேவையான  அனைத்து ஊட்டச்சத்துக்களும் வெள்ளரிக்காயில் நிறைந்திருப்பதால், சரும செல்களை பாதுகாக்கின்றது.
 
வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக் கருமையை போக்கும்.
 
வெள்ளரிக்காயில் நிறைந்துள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கருப்பை, மார்பகம், இரைப்பை தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 
வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது, இரத்தத்தில் உள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள  உதவுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :