வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் வெள்ளை பூசணி சாறு...!!

வெள்ளை பூசணி சாறு உடல் எடையை சமநிலை படுத்துவதற்கு ஒரு அருமையான பானமாகும். இது வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது.


இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது மற்றும்  ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
 
பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள்.  இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
 
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். தேவையான பொருட்கள்: பூசணிக்காய் - அரை கிலோ, 
தேன் - 2 தேக்கரண்டி, தண்ணீர் - தேவைக்கு ஏற்ப.
 
செய்முறை: வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும். வடி கட்டி எடுத்த  வெண்பூசணியுடன் 2ஸ்பூன் தேன் கலந்து பருகினால் உடல் எடை குறையும்.
 
அதுமட்டுமல்லாமல் இது வேறு பல நோய்களையும் குணப்படுத்துகிறது. பூசணிக்காயில் கொழுப்பு சத்து மிக குறைவாக இருப்பதினால் நீரழிவு நோயாளிகள் மற்றும்  இதய நோயாளிகளுக்கும் சிறந்தது.
 
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உடல்  குளிர்ச்சியுடன் இருக்கும்.
 
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக  இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
 
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும்  இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு மிகவும் நல்லது.
 
சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம்  சம்பந்தமான நோய்கள் முழுமையாக குணமாகும்.