1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு விரட்ட எளிய வழி!

ஒருவரது உடலில் சளி தேங்குவதற்கு உண்ணும் உணவுகள், பழக்கவழக்கங்கள் போன்றவையே காரணம். இப்படி உடலில்  தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒருசில பொருட்களின் மூலம் வெளியேற்றலாம். இக்கட்டுரையில் உடலின் மூலை  முடுக்குகளில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நான்கு அல்லது ஐந்து  பூண்டுப் பற்களை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து எடுக்கவும். சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில்  போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும்.
 
மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டது. இதனை உப்புடன் சேர்த்து பயன்படுத்தும் போது, உடலினுள் உள்ள தொற்றுக்களை சரிசெய்து மற்றும் தொண்டை புண்ணை போக்கும். ஒரு டம்ளர்  வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தினமும் 4 முறை குடித்து வர சளி உருகி, தொண்டையில்  கபம் தேங்குவது குறையும்.
 
அடிக்கடி தூதுவளை கீரையை துவையல் செய்து மதிய நேரத்தில் சாப்பிட்டு வர சளியினால் ஏற்படும் தொந்தரவு தீரும்.
 
சளியினால் ஏற்படும் இருமலை போக்க அடுப்பில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து அதில் ஒரு டீஸ்பூன்  மிளகு தூள், தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். அரை டம்ளர் ஆனவுடன் இறக்கி வடிகட்டி சூடாக  பருகவும். இவ்வாறு குடிப்பதால் இருமல் நிற்பதோடு சளி தொல்லையும் குறையும்.
 
இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இஞ்சி உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான சளியை வெளியேற்றும். முதலில்  ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டி, தேன் கலந்து சாப்பிட்டு வர சளி விரைவில் வெளியேறும்.