வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கோடையில் ஏற்படும் வியர்வை நாற்றதை விரட்டும் இயற்கை வழிகள்...!

மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும். அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின்  தன்மையாக இருக்கலாம்.
உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும்  வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது.
 
இந்த வியர்வையை நிறுத்தினால் உடல் பாதிக்கும் ஆனால் வியர்வை வாடையில்லாமல் செய்யலாம். என்ன சென்டாக இருந்தாலும் 3 மணிநேரம் தான் அப்புறம் வியர்வையோடு கலந்து அது ஒரு வாடையாகிவிடும். சிலருக்கு தோல் புற்று நோய் வந்துவிடும். அலர்ஜியை  உண்டாக்கும்.
கோடையின் பல்வேறு தொல்லைகளில் வியர்வையும் ஒன்று. கோடையில் வாட்டியெடுக்கும் கடுமையான வெயில் காரணமாகவும், தொடர்ந்து  வேலை செய்வதாலும் இயல்பாகவே பலருக்கு வியர்வை உண்டாகும்.
 
இந்த வியர்வையால் ஏற்படும் நாற்றம், நெருங்கிய நண்பர்களையும் கூட நம் அருகில் நெருங்கவிடச் செய்யாது. நம்மை அறியாமலேயே நடக்கும் இதுபோன்ற சங்கடங்களை எளிதாகத் தடுக்கலாம்.
 
தினசரி குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.  இந்த நீரில் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கிவிடும்.
 
இதேபோல், குளிக்கும் போது படிகாரத்தை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றத்தை அது ஓரளவு குறைக்கும். குளிக்கும் தண்ணீரில் டெட்டால் போட்டு தொடர்ந்து குளித்து வரும்போது, வியர்வை நாற்றம் போய்விடும்.
 
குளித்த பின்னர் உடலில் வாசனை பவுடர்களை நிறைய பூச வேண்டும். காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பதால் வியர்வை  நாற்றத்தை தடுக்க முடியும்.
 
கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், மோர், பழச்சாறு, பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும்.