புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கிவி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்களும் அவை பயன்படும் விதமும்...!!

கிவி பழம் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதனை பொதுவாக அப்படியே சாப்பிட்டாலும், இதனை மேலும் பல உணவு வகைகளில் சேர்த்தும்  பயன்படுத்தலாம். இந்த வகையில், இங்கே சில குறிப்புகள்.
கிவியில் நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் நார் சத்து உங்கள் இருதய ஆரோக்கியத்தை அதிகப் படுத்த உதவும். பொட்டசியம் எடுத்துக் கொள்வதால் சோடியத்தின்  அளவை குறைத்து.
 
கிவி பலத்தை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சுவாசம் குறித்த பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமடையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கிவி பழத்தை முந்திரி, பாதம், கீரை வகைகள், மற்றும் காளான் போன்றவற்றோடும் சாப்பிடலாம். இது நல்ல சுவையைத் தரும்.
 
பல ஆய்வுகளில் கிவி பழத்திற்கு மலமிளக்கும் தன்மை இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இதனால் இது சுலபமாக மலம் கழிக்க உதவுகின்றது. மல சிக்கலை  போக்க, இதனை ஒரு நாளைக்கு இரண்டு என்ற முறையில் நான்கு வாரம் சாபிட்டால் முற்றிலும் இந்த பிரச்சனை குணமடையும்.
 
ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் எட்டு வாரத்திற்கு தொடர்ந்து இதனை சாபிட்டால் அதிக இரத்த அழுத்தம் குணமடையும். கிவி பழத்தை, தெதேன், பால், மற்றும் ஓட்ஸ், இவைகளோடு சாலடாக செய்து சாபிட்டால் நல்ல ருசியோடு, நற்பலனையும் தரும்.
 
கிவி பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குறிப்பாக இரத்த அழுத்தம் அதிகம் இருந்தால், அதனை சரி செய்து சீரான அளவிற்கு பெற உதவும். அதிக அளவு சோடியம்  எடுத்துக் கொள்ளும் போது, இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. எனினும், கிவி பழம் அதனை சீர் செய்ய உதவுகின்றது.
 
கிவியில் அதிகம் நார் சத்து நிறைந்துள்ளதால் இது உடலில் சேரும் கேட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகின்றது. இதனால் உடல் எடை அதிகமாவதையும்  குறைத்து, சீரான உடல் எடை பெற உதவுகின்றது.
 
கண்களுக்கு கீழ் கரும் வளையம் தோன்றுவது இயல்பே. எனினும், இது முக அழகை குறைக்கும். அதனை போக்க, கிவி பழம் பெரிதும் உதவும். கிவி பேஸ் பாக் செய்து தொடர்ந்து பயன் படுத்தி வரும் போதும், கரும் வளையம் மறைந்து, நல்ல சுத்தமான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.