வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

குப்பைமேனி இலையை எவ்வாறு பயன்படுத்துவதால் பலன்கள் கிடைக்கும்...?

குப்பைமேனி இலைகள் உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்ததாகும். 

குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது குப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து அரைத்து நெற்றியில்  பற்று போடா தலைவலி குணமாகும்.
 
உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெய்யுடன் செய்து காய்ச்சி உடலுக்கு தேய்த்து வந்தால் உடல் வலி தீரும். குப்பைமேனி இலையை  அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயம்பட்ட இடங்களுக்கு தடவினால் காயம் விரைவில் குணமாகும்.
 
குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து அரைத்து பாலில் கலந்து கொடுக்க குழைந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும். குப்பைமேனி இலையுடன்  சர்க்கரை சேர்த்து பாலில் 1 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி தீரும். உடல் குளிர்ச்சி பெறும்.
 
மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும்.
 
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர பருக்கள், புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை துவையலாக செய்து சாப்பிட்டுவர குணமாகும்.
 
குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும். தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.