1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தொப்பையை குறைக்க பூண்டு எவ்வாறு பயன்படுகிறது...?

சமையலில் சேர்க்கும் பொருட்கள் சில பொருட்களுக்கு இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும். 

இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
 
உடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது. அதிலும் முக்கியமாக பூண்டு நமது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்கும் தன்மை கொண்டுள்ளது.
 
உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.
 
ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து  பருகவும்.