உடல் பருமனை குறைக்க எவ்வாறு உதவுகிறது கற்றாழை...?
கற்றாழை ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது மற்றும் இது உடலை தூய்மைப்படுத்துகிறது. நம் உடல் சுத்தமாக இருக்கும்போது, உடல் எடை விரைவில் குறையும்.
கற்றாழை நம் உண்ணும் உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. இது உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுகிறது. இதனால் எடை குறைகிறது.
கற்றாழை பல ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. அதனால் பசைத்தன்மை குறைகிறது. குறைவாக சாப்பிடுவதால் எடையும் குறைகிறது. கற்றாழையை சரியான அளவில் தொடர்ந்து உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்க முடியும்.
கற்றாழை உடலில் உள்ள சக்கரையின் அளவை குறைக்கும். அதுவும் உடல் எடை குறைய ஒரு காரணமாய் விளங்குகிறது.
கற்றாழை சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.அவை உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. எனவே உடல் எடை குறைகிறது.
கற்றாழை சாறு ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே மலச்சிக்கலை சரிபடுத்துகிறது.உடலில் கழிவுகள் சேருவதை தடுக்கிறது. இதுவும் உடல் எடைகுறைய ஒரு காரணம்.