1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பல் கூச்சத்தை போக்குவதற்கான சில எளிய வழிகள் !!

பல் வலியைக் கூட தாங்கிக் கொள்ளும் பலரால் பல் கூச்சத்தை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. கல் உப்பினை சிறிது வெது வெதுப்பான நீருடன் சேர்த்து வாயினுள் நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் செய்து வந்தால் பல் கூச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறை ஆரம்பிக்கும்.
 
கிராம்பு: கிராம்கராம்பை வாயினுள் வைத்து கொப்பளித்து உமிழ்வதன் மூலமும் பல் கூச்சத்தை குறைக்க முடியும். வாயில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கும் கிராம்பு பயன்படுகின்றது.
 
புதினா இலை: புதினா இலையை வெயிலில் உலர வைத்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து பற்களை துலக்கி வந்தால் பல் கூச்சம் வேகமாக மறையும். இதை வெறுமனே வாயில் போட்டு மென்று வந்தாலும் பற்களில் ஏற்படும் கூச்சம் குறையும்.
 
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய்யை பல் துலக்குவதற்கு முன் நன்றாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் பல் கூச்சம் வேகமாக மறையும். இந்த தேங்காய் எண்ணெய் ஈறுகளில் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்துவிடும்.
 
கொய்யா இலை: கொய்யா இலையினை நன்றாக வாயினுள் போட்டு மென்று ஈறுகளில் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு தடவைகள் செய்து வந்தால் பல்கூச்சம் வேகமாக மறையும்.