திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth.K
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:47 IST)

முள்ளங்கி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Radish
அன்றாடம் உண்ணும் காய்கறிகளில் பல நல்ல சத்துகளை கொண்டவற்றில் முள்ளங்கியும் ஒன்று. முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.


  • முள்ளங்கியில் விட்டமின் பி, சி,கே, பொட்டாசியம், நார்ச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.
  • இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவையான அந்தோசியனின் முள்ளங்கியில் நிறைந்துள்ளது.
  • முள்ளங்கி சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராகி கட்டுப்படுத்தப்படுகிறது.
  • முள்ளங்கி இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
  • உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் விட்டமின் சி முள்ளங்கியில் உள்ளது. இதை சாப்பிடுவதால் பசி அதிகரிக்கும்.
  • முள்ளங்கி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைந்து உணவு நன்றாக ஜீரணமாகும். மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி, குடலைச் சுத்தம்செய்யும்.
  • முள்ளங்கி சாப்பிடுவதால் கல்லீரலில் உள்ள கழிவுகள் வெளியாகு உடல் சுத்தமாகிறது. முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.