திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (11:36 IST)

ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் பயன்கள் தெரியுமா?

Avaraikai
சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் அவரைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான சத்துகளை வழங்குகிறது.


 
  • அவரைக்காயில் விட்டமின் பி1, இரும்புச்சத்து, காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துகள் அடங்கியுள்ளன.
  • நார்ச்சத்துக்கள் அவரைக்காயில் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.
  • அவரைக்காயில் உள்ள கால்சியம் சத்து உடலில் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • அவரைக்காயில் எல்-டோப்பா என்ற அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இது அளிக்கும் சுவையானது மன அழுத்தத்தை போக்குகிறது.
  • அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • மலச்சிக்கல், வயிற்று பொருமல் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் தரும்.
  • அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும்.
  • முற்றிய அவரைக்காயை உணவில் சேர்க்க கூடாது. அதற்கு பதிலாக சூப் செய்து குடிக்கலாம்.