வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் ஒரு அற்புத மூலிகை நெருஞ்சில்...!

ஆயுர்வேத மருத்துவங்களில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இவை பாதையோரங்கள், புல்வெளிகள், தரிசுநிலங்கள், வயல்கள், வரப்புகள் என எங்கெங்கும் சின்னஞ்சிறு வடிவில் படர்ந்து கிடப்பவை. சிறுநீரகத்தைச் சீராக்க உதவும் ஒரு அற்புத மூலிகையாகும். 

நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதக் அளவு காணப்படுகின்றன.
 
பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. 
 
நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள்  நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
 
நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.


 
நெருஞ்சி முள், சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும். சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக  பயன்படுத்தப்படும். ரத்த சுத்திக்கும், சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை  சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு இருந்தால் அவை நீங்கி நிவாரணம் தரும்.
 
கண் எரிச்சல் குணமடையும் உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள் நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல்  உஷ்ணம் போன்றவை குணமாகும்.