இத்தனை அற்புத மருத்துவ நன்மைகளை கொண்டதா முருங்கை கீரை....!

முருங்கை கீரை எளிதாக கிடைக்கும் ஒரு கீரை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில்  நிறைந்துள்ள ஒரு மரம். 
இது சர்க்கரை நோய், இருதய நோய்கள், இரத்த சோகை, ஆர்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய், தோல் மற்றும் ஜீரண கோளாறுகளை போக்க  கூடியது.
 
முருங்கை கீரையில் வைட்டமின் சி, ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம்  அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது.
 
முருங்கை இலையின் பொடியானது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை  குறைக்க உதவுகிறது.
 
முருங்கை இலையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, சருமத்தில் ஏற்படும் தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை போக்கவும்  உதவுகிறது.
 
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
 
குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கைக் கீரையின்  சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது.  
 
கல்லீரலை சுத்தம் செய்யும். நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அழிக்கும். எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும்.
 
ரத்தசோகை, சருமப்பிரச்னை, சுவாசப்பாதை, ஜீரண மண்டல பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும். 
 
வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.  வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற  பிரச்னைகளில் இருந்து காக்கும்.
 
முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்திப்பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து, குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக  மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
 
முருங்கை காய் கோழையை அகற்றும். முருங்கை பிசின் விந்துவைக் கட்டும். ஆண்மையைப் பெருக்கும். முருங்கை பட்டை, கோழை, காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றைப் போக்கும்; வியர்வையை பெருக்கும். குடல் வாயுவை அகற்றும். 


இதில் மேலும் படிக்கவும் :