உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் க்ரீன் டீ!!
க்ரீன் டீ அருந்துவதால் உடல் எடையை குறைக்க உதவும். க்ரீன் டீ அதன் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கதின் காரணமாகவே பிரபலமடைந்து வருகிறது. ஏனெனில், இதன் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகள் பல நன்மைகளை நமது உடலுக்கு வழங்குகிறது.
க்ரீன் டீயில் தியானைன் எனப்படும் ஒரு வகை அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. இந்த அமிலம் மன அழுத்தத்தை குறைத்து மூளைக்கு அமைதியை அளிக்கிறது. இந்த விளைவு மன அழுத்தத்தினால் பருமனான உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
க்ரீன் டீ, பூஜ்ஜியம் கலோரி மற்றும் பூஜ்ஜியம் கொழுப்பினை கொண்ட ஒரு தேநீர் பானமாகும். ஆகையால், இவற்றை அருந்துவது, உடலில் எவ்வித கலோரிகளையோ அல்லது கொழுப்பினையோ உடலில் சேர்க்காது.
க்ரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நேரடியாக இதய நோய்க்கு வழிவகுப்பதைத் தடுக்கும். க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள், பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
க்ரீன் டீயினால் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், க்ரீன் டீ பேக்குகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக அதன் இலைகளைப் பயன்படுத்துங்கள். அதுவும் கொதிக்கும் நீரில் க்ரீன் டீ இலைகளைப் போட்டு, மூடி வைத்துவிட வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்த கலந்து குடிக்கலாம். இதனால் க்ரீன் டீ சுவையாக இருப்பதோடு, அதனால் கிடைக்கும் முழு நன்மைகளையும் பெற முடியும்.