வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

வாய்வுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணங்களும் தீர்வுகளும்...!!

செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய  காரணமாகும்.
 
வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால், அதனை சரி செய்யவேண்டியது அவசியம்.
 
வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாய்வு தடுக்கப்படுகிறது.
 
மசாலா பொருட்களான சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை  வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.
 
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெய் வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
 
தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. மேலும் இவை அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.
 
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
 
ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.
 
சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும்  சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.