திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By

வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்கும் வழிகள்...!

வெரிகோஸ் வெயின் ஆண், பெண் என இரு பாலருக்கும் வரும். இருப்பினும் பெண்களை அதிகமாக தாக்குகிறது என்கின்றனர். இந்த வெரிகோஸ் வெயின் வருவதற்கு முக்கிய காரணம், அதிகமான உடல் எடையால் இரத்த அழுத்தம் அதிகமாவது ஆகும்.
வெரிகோஸ் வெயின் என்பது காலின் தொடைப்பகுதிக்கு கீழோ அல்லது முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டிருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் இருக்கும். இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில்  வலியும்,வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும். 
 
கால் பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.   நாள்பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. 
 
வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குறைக்க ஒரு இயற்கை முறை கொடுக்கப்பட்டுள்ளது.
 
செய்முறை: பச்சை தக்காளி பழங்களை எடுத்து அதனுடன் தேன் மற்றும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நன்றாக தண்ணீர் பதம் வரும் வரை அரைக்கவும். இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு முன் குடிக்க வேண்டும்.
மேலும் இந்த தக்காளி பழங்களை தோலை உரித்து விட்டு வெரிகோஸ் வெயின் ஏற்பட்ட இடத்தில் தேய்க்கவும் செய்யலாம்.
 
இந்த இயற்கை முறை வெரிகோஸ் வெயின் பிரச்சினையை குணப்படுத்துகிறது என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இதை தினமும் சரியான  அளவில் எடுத்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதனுடன் சேர்த்து உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். உடற்பயிற்சியுடன்  இந்த முறையை பயன்படுத்தினால் விரைவில் வெரிகோஸ் வெயின் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
 
வெரிகோஸ் வெயின் சிகிச்சை எடுக்கும் போது உங்கள் மருத்துவரிடம் டயாபெட்டீஸ், ஹைபர் டென்ஷன் இருக்கா என்பதை அறிந்து  கொள்வது நல்லது. பச்சை தக்காளியில் உள்ள அல்கலாய்டு சோலனின் இயற்கையாகவே நமது உடலில் இரத்தம் கட்டுதலை குறைக்கிறது.  இது உங்கள் நரம்புகளின் சுவர்களை வலிமையாக்குகிறது. எனவே எளிதாக வெரிகோஸ் வெயினை குணப்படுத்துகிறது.