கோடைக்காலத்தில் சாப்பிட உகந்த உணவுகளும் பலன்களும் !!
தயிர் ஒரு முக்கியமான கோடைக்கால உணவாகும். புரதமானது உடலுக்கு தேவையான சத்தை அளிக்கிறது. மேலும் அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில் இருந்து இது தடுக்கிறது.
நெய் தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக கோடை காலத்தில் நெய் அதிகமாக உட்கொள்வது உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
நம் உடலில் உள்ள செல்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல கொழுப்பு அமிலங்களும் ஆற்றலும் தேவை.
நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அவை, நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, முக்கிய ஹார்மோன்களை அதிகரிக்க உதவுகிறது. ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகிறது.
வெயிலால் உடலில் ஏற்படும் உஷ்ணத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க அவசியம் உடலில் உள்ள நீர் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் சத்து நிறைந்த தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் போன்றவை வெயிலுக்கு ஏற்றவை. இவற்றை அரைத்து ஸ்மூத்தி போன்றோ அல்லது சாலட் போன்றோ உண்ணலாம்.
பழங்களில் அன்னாசி, மாம்பழம், பப்பாளி முதலியவை உஷ்ணம் நிறைந்தவை. அவற்றை அதிகம் சேர்க்காது இருப்பது நன்று. தயிர், மோர் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுவகைகளை எண்ணெயில் பொரிப்பதை தவிர்த்து தீயில் வாட்டி உண்ணலாம்.
காய்கறிகளை பொறுத்தவரை சுரைக்காய், பூசணிக்காய், முள்ளங்கி முதலியன கோடைக்காலத்தில் சிறந்த உணவு வகைகள். தவிர்க்க வேண்டியவை உருளை கிழங்கு, வெங்காயம் முதலியவை.
பொதுவாக இனிப்பு பதார்த்தங்களை கோடைகாலத்தில் குறைத்துக்கொள்ள வேண்டும். அவை உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும்.