முட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லதா...?
முட்டையின் பாதியளவு புரதத்தினையும், கொழுப்புச்சத்தினையும் இது பெற்றிருக்கிறது. முட்டையில் விட்டமின் பி2, பி5, பி6, பி9, பி12 ஏ ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. மேலும் இதில் விட்டமின் பி1, பி3, டி, இ,கே போன்றவைகளும் உள்ளன.
இதில் கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், செலீனியம், செம்புச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம், சோடியம் போன்ற தாதுஉப்புக்கள் காணப்படுகின்றன.
இதில் நீர்த்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் இருக்கின்றன. மேலும் இதில் லுடீன் ஸீஸாக்தைன், சோலைன், அமினோ அமிலங்கள் போன்றவையும் காணப்படுகின்றன.
மருத்துவப்பண்புகள்: முட்டையானது தனித்துவமான உயர்தர புரதச்சத்தினைக் கொண்டுள்ளது. இதில் உள்ள புரதச்சத்தானது செல்களின் உற்பத்திக்கு காரணமாவதுடன் செல்களின் மறுவளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பிலும் முக்கியமானதாக விளங்குகிறது. வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ முட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதய நலத்திற்கு முட்டையானது கொழுப்பினைக் கொண்டிருந்தபோதிலும், இதனை உண்ணும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவினை அதிகரிக்கச் செய்கிறதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே இதனை உண்ணும்போது பக்கவாதம், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. முட்டையை உட்கொள்ளும்போது அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வதைத் தவிர்த்து ஆரோக்கியமான உடல்எடை இழப்பினைப் பெறலாம்.
முட்டையில் உள்ள சோலைன் அறிவாற்றல் திறனை மேம்படுத்துகிறது. சோலைன் மூளைக்குச் செல்லும் சிக்கலான நரம்புகளின் உற்பத்தி மற்றும் செயல்திறனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். முழு முட்டையானது அதிகளவு சோலைனை நமக்கு வழங்குகிறது. எனவே முட்டையினை ஒண்டு அறிவாற்றலை மேம்படுத்தலாம்.