தொடர்ந்து தலைக்கு குளிப்பதாலும், மழையில் நீண்ட நேரம் நனைவதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. வேறு சில காரணங்களாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்தி இன்மை, புகை மற்றும் காற்று மாசடைந்த இடங்களில் நீண்ட நேரம் இருப்பதாலும், மழை மற்றும் பனிக்காலங்களில் இரு சக்கர வாகனங்களில் அதிக தூரம் செல்லும்போது தலைக்கு எந்த பாதுகாப்பும் செய்து கொள்ளாமல் செல்வதாலும் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது. ...