உடல் இழந்த சத்துக்களை திரும்ப தருகிறதா பலாப்பழம் !!
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகமிருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
பலாப்பழத்தில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இதனை சீசன் போது தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புகளின் மூலம் ஏற்படும் வாய்வு தொல்லையை தவிர்க்கலாம்.
பலாப்பழத்தில் டயட்டரி கொழுப்புகள் அதிகம் இருப்பதால், அவை குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, குடல் புற்று நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் பிளேவோனாய்டுகள் உள்ளது. இவை புற்று நோய் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
தற்போது அனைவருமே விரைவிலேயே முதுமைத் தோற்றம் அடைகிறார்கள். ஆனால் பலாப்பழத்தை உட்கொண்டு வந்தால், விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுத்து, சருமத்தை இளமையோடு பாதுகாக்கலாம்.
பலாப்பழத்தில் நார்சத்து வளமாக நிறைந்திருப்பதால், அவற்றை உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கும். இந்த ஊட்டச்சத்து நிறைந்த பலாப்பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டும்.
பலாப்பழம் சாப்பிடுவதால் உடலின் கடுமையான உழைப்பால் இழந்த சத்துக்களை பலாப்பழம் அல்லது பலாப்பழத்தால் செய்யப்பட்ட பானகங்கள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உடனடியாக பெறலாம்.