திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை அதிக சத்துக்களை கொண்டுள்ளதா எள்...!!

வைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது.

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
 
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.
 
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
 
மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. 
 
மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த மாதவிடாய் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.
 
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது. மேலும் பல விதமான புற்று நோய் வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
 
அசைவ உணவில் உள்ளதைக் காட்டிலும் சைவ உணவில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் சத்து எள்ளில் அதிக அளவு கிடைக்கிறது.